Monday, March 14, 2016

திரு. பெருமாள் அம்மாவாசி தேவன்

அவர்களுடன் கேள்விக்கு என்ன பதில் - ஓர் உரையாடல்.



திரு. பெருமாள் அம்மாவாசி தேவன் அவர்கள் பதில்களில் இருந்து சில...

  • திமுக தொற்றுநோய் போன்றது.... அதிமுக என்பது ஒரு நோய் மட்டுமே....
  • கள்ளர் மறவர் அகமுடையார் என்பது யாருக்கும் எதிரான கூட்டணி அல்ல...
  • கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்காள தேஷ் கூட ஒரு மொழி வழி தேசத்திற்கு எடுத்துக் காட்டுதான்...
  • திருமணம் மூலம் சமநிலையை அடைய முடியும் என்ற தவறான பிரச்சாரம் தமிழகத்தில் மட்டுமே....
  • இந்தியத் துணைக்கண்டத்தில் எந்த பிரிவினரின் வழிபாட்டு முறையையும் இந்து என்று குறிப்பிடுவது அவர்களின் சமயத்திற்கு ஏற்றத்தை தந்து விடாது...
  • இயக்குனர்கள் ரவுடிகளின் கதைகளை படமெடுத்து அவர்களை அவர்களை நாயகர்களாக ஆக்கி வருகின்றனர்.  இது தமிழினத்திற்கே அவமானமான செயலாகும்....
  • கள்ளர்கள் தமிழ்த் தேசிய ஆட்சி குறித்தெல்லாம் சிந்திக்கவே இல்லை... அப்புறம் எங்கே முதல்வர் பற்றி  சிந்திப்பது?

கேள்விக்கு என்ன பதில்? திரு பெருமாள் அம்மாவாசி தேவன் அவர்களோடு ஒரு உறையாடல்.

பெருமாள் அம்மாவாசி தேவன் அவர்களைப் பற்றி சில வரிகள்...

இவரைப்பற்றி சொல்ல நிறைய இருந்தாலும் சுருக்கமாக ஒரு விசயத்தை சொன்னால் இவரை எளிதாக புரிந்து கொள்ள முடியும்!

"பள்ளர்களும் கள்ளர்களும்" பரம எதிரிகள் என்ற சூழலில். குறிப்பாக "மீண்டெழும் பாண்டிய வரலாறு" என்ற புத்தகம் "கள்ளர்கள்" மனதில் சலசலப்பை உருவாக்கி காலகட்டத்தில். அப்புத்தக ஆசிரியரான "செந்தில் மள்ளர்" என்பவர் ஏற்ப்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு....

"இவங்க(செந்தில் மள்ளர்) சொல்வதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இருக்கா-னா இல்லை! ஆனால் இவர்களின் இந்த சுயசாதி எழுச்சியானது தமிழ்தேசியத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் என்பதால் இங்கே கலந்துகொண்டேன்" - என்று சொன்னவர்

தமிழ் சாதிகளுக்கிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்! அவற்றை கடந்து அவர்களுக்கு இடையே ஒரு நட்புறவு இருக்க வேண்டும் என்று இவர் கொண்ட எண்ணம் ஒன்றே போதும் இவரைப்பற்றி புரிந்துகொள்ள.

கேள்விகளும் பதில்களும்

  • கேள்வி 1:

    சாதி போன்ற ஏதாவது ஒரு உட்கட்டமைப்பை அடிப்படையாக வைத்து மொழி வழி தேசியங்கள் இதற்க்கு முன் அமைக்கப்பட்டிருக்கின்றதா? "மொழி வழியில் ஒரு தேசியம்" இதற்க்கு முன்பு வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றதா?
  • சாதி போன்ற உட்கட்டமைப்பை வைத்து தேசியங்கள் அமைந்தனவா என்று சொல்ல முடியாது. ஆனால் மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் பல நாடுகள் அமைந்துள்ளன. இன்னமும் மொழியை வைத்து பல நாடுகளில் பிரிவினை முன் வைக்கப்பட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    //"மொழி வழி தேசியம்" இதற்க்கு முன்பு வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றதா?// கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்காள தேஷ் கூட ஒரு மொழி வழி தேசத்திற்கு எடுத்துக் காட்டுதான்.
  • கேள்வி 2:

    சாதி அடிப்படையிலான பிரச்சனைகள் இந்தியம் முழுமைக்கும் நடந்து வருகின்றது, இன்று கூட உடுமலைப்பேட்டையில் படுகொலை நிகழ்ந்திருக்கின்றது. அதற்க்கு நீங்கள் முன்னிருத்தும் தீர்வு என்ன?
  • சாதி பிரச்சனை இந்தியா முழுவதும் இருந்து வந்தாலும் மற்ற பல விஷயங்களில் எல்லா மக்களிடமும் இணக்கம் இருந்துதான் வருகிறது.

    சாதி உரிமைப் பிரச்சனையாக மாறும்போது மோதல்கள் ஏற்பட்டு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விடுகின்றன. திருமணம் ஒரு உரிமைப் பிரச்சனையாகும். ஆனால் அதன் மூலம் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம் என்ற தவறான பிரச்சாரமே கௌரவக் கொலைகளுக்கு வழிவகுக்கின்றன.

    திருமணம் மூலம் சமநிலையை அடைய முடியும் என்ற தவறான பிரச்சாரம் தமிழகத்தில் மட்டுமே பகுத்தறிவாளிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதியினரின் அல்லது இனக்குழுவின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். எனவேதான் அதனால்தான் பாதிக்கப்படும் நபர்கள் எந்த முடிவுக்கும் தயாராகிறார்கள். குறிப்பாக பெற்ற மகளையே கொல்லத் துணிகிறார்கள்.
  • கேள்வி 3:

    தமிழர் வழிபாட்டு முறைகள் அனைத்தையும் இந்து மதம் என்ற ஒற்றை வரையறைக்குள் கொண்டு வருவது தமிழர்களின் சமய உணர்வை ஏற்றம் பெறச் செய்யுமா? இல்லை பாதகங்களை ஏற்ப்படுத்துமா? (உதாரணத்திற்க்கு: இந்து என்ற வரையறைக்குள் வந்ததும் தாமாகவே இசுலாமியர்களின் மீது ஒரு வெறுப்புணர்வு வந்துவிடுகின்றதே!)
  • தமிழர்கள் என்று மட்டுமில்லை, இந்தியத் துணைக்கண்டத்தில் எந்த பிரிவினரின் வழிபாட்டு முறையையும் இந்து என்று குறிப்பிடுவது அவர்களின் சமயத்திற்கு ஏற்றத்தை தந்து விடாது. அதேவேளையில் இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோர் ஒரே அடையாளத்தில் அழைக்கப்படும்போது பல்வேறு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களுக்கு ஒரு ஒற்றை அடையாளம் தேவைப்படவே செய்கிறது.

    இஸ்லாம் மதத்தை வைத்து என்று அரசியல் துவக்கப்பட்டதோ அன்றே அதை வைத்து இந்து மதம் சார்பாக பேசுவோரும் இஸ்லாம் எதிர்ப்பு அரசியலை துவக்கி விட்டார்கள். இதுதான் நீங்கள் சொல்லும் வெறுப்புக்கு காரணம். மற்றபடி இனம் சார்ந்த சிந்தனை பெருகும்போது மத அரசியல் நீர்த்துப் போகும். இயல்பாகவே தமிழர்கள் மத சகிப்புத் தன்மை கொண்டவர்கள். அதனால் மதம் சார்ந்த அரசியல் அவர்களிடம் எடுபடாது.
  • கேள்வி 4:

    ஒருவரே இரண்டு பதவிகளை வகிக்க கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டிருப்பது, அவரால் சரியாக செயலாற்ற முடியாது என்பதால் தானே? எனில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இயக்கங்களில் உங்களால் எப்படி செயலாற்ற முடிகின்றது? இதுபோல் ஒருவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இயக்கங்களில் இருப்பது பொது வாழ்விற்க்கு உகந்ததா?
  • நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் அவசியம் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வகிப்பதில் தவறில்லை. குறிப்பாக இந்தப் பிரச்சனை அரசியல் கட்சிகளில் அதிகாரம் பெற்றவர்கள் பதவிகளை தங்களிடம் குவித்து வைத்துக் கொள்வதால்தான் இந்தப் பிரச்சனை பெரிதாக்கப்பட்டது.

    ஆனால் ஒருவரால் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளில் சிறப்பாக செயல்பட முடியும் என்கிற போது அதைச் செய்வதில் தவறில்லை. உச்ச பதவிகளில் இருப்பவர்கள் அதுபோல இருக்கவே செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளில் இருக்கிறார். எடுத்துக் காட்டாக பட்டியல் சாதி பிரிவினரின் நலத்துறைக்கும் அவரே தலைவராக இருக்கிறார்.

    முடிந்தவரை பதவிகளை குறைத்துக் கொள்வது நல்லது. அவசியம் கருதி ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வகிப்பதில் தவறும் இல்லை. ஆனால் அவர் அந்தப் பதவியில் எப்படி செயல்படுகிறார் என்பதுதான் மிக மிக முக்கியமானது.
  • கேள்வி 5:

    தி.மு.க வை விமர்சித்து அதிமுகவினர் சொல்லும் கருத்துக்களை நீங்கள் பேசுவது என்பது, அதிமுக-வை ஆதரிப்பது அல்லது அதிமுகவின் கருத்துக்களை பரப்புவது என்ற புள்ளியில் உங்களை நிறுத்திவிடுகின்றதே? இதை எப்படி கையாளுகின்றீர்கள்?
  • அதிமுகவின் கருத்துக்களை பரப்புவதில்லை. அவர்கள் செய்யும் விமர்சனங்களை பகிர்ந்து கொள்கிறேன். மற்றபடி இரண்டுமே விஷ விருட்சங்கள்தான். இரண்டுமே ஒழிக்கப்பட வேண்யடிவை. திமுக தொற்றுநோய் போன்றது எளிதில் பரவக் கூடியது. எனவே அந்த நோய் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிமுக என்பது ஒரு நோய் மட்டுமே. அதனை கையாள்வது எளிது. எனவே திமுக என்ற நோய் மீது அதிக கவனம் செலுத்தினால் அது அதிமுக என்ற நோய்க்கு சாதகமானதாக ஆகாது. அப்படி யாரும் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
  • கேள்வி 6:

    தமிழ்தேசியம் பேசும் சீமான் போன்றவர்களுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் உங்களைப்போன்றவர்களுக்கு கிடைப்பதில்லையே! அதை நினைத்து வருந்தியது உண்டா?
  • அப்படியெல்லாம் கிடையாது. நல்ல விஷயங்களுக்கு, சரியான கருத்துக்களுக்கு வரவேற்பு இருக்கவே செய்கிறது. ஆனால் அதனுடைய வேகம் மெதுவாக இருக்கிறது. இறைவன் விருப்பப்படி எல்லாம் நடக்கும். இனம் சார்ந்த கருத்துக்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.
  • கேள்வி 7:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்க்கு உட்பட்டு முதல்வராகும் நபர் இவற்றை செய்ய முடியும், இவற்றை செய்ய முடியாது என்ற விழிப்புணர்வை மக்கள் அடைந்திருக்கின்றனரா? ஈழ பிரச்சனைகளை முன்னிருத்தி "நான் தமிழக முதல்வரானால்..." என்ற பிரச்சாரத்தை எப்படி பாக்குறீங்க?
  • இது திராவிடக் கட்சிகள் தங்கள் தோல்விகளை மறைக்கச் செய்யும் விஷமப் பிரச்சாரம். முதல்வர் பதவியை வைத்து நிறைய வேலைகளைச் செய்ய முடியும். குறிப்பாக இந்திய தேசத்தின் மூலம் நமது இலக்குகளை எளிதில் அடைய இயலும்.

    மண்ணின் மைந்தர்கள் ஆட்சிக்கு வரும்போது அது நிச்சயம் நடக்கும்.
  • கேள்வி 8:

    தமிழ் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் "சமூகத்தால் வெறுக்கப்படவேண்டிய ரவுடி கலாச்சாரத்தை ஹீரோயிசமாக காட்டுகின்றனர்" என்று சொல்லும் அளவிற்க்கு கடந்த 25 ஆண்டுகளாக தென் தமிழகத்தை களமாக கொண்டு வந்த (மற்றும்) வந்துகொண்டிருக்கும் திரைப்படங்கள்... தமிழ்சாதிகளுக்கு இடையேயான மோதல்களை உருவாக்குவதாக உள்ளதே? அது போன்ற திரைப்படங்கள் தேவைதானா?
  • பொதுவாக திரைத்துறையே திராவிடச் சாயலில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான இயக்குனர்களும் அப்படியே இருக்கிறார்கள். தமிழர்களின் வீர வரலாற்றில் ஏராளமான கதைகள் உள்ளன. அவற்றை சொல்ல முடியாத இயக்குனர்கள் ரவுடிகளின் கதைகளை படமெடுத்து அவர்களை அவர்களை நாயகர்களாக ஆக்கி வருகின்றனர்.

    இது தமிழினத்திற்கே அவமானமான செயலாகும். மண்ணின் மைந்தர்களின் ஆட்சியில் தி்ரைத்துறை சரியாக வழிநடத்தப்படும். அது தமிழினத்திற்கு உதவுவதாக இருக்கும். வெறும் பணம் சம்பாதிக்கும் துறையாக இருக்காது. பயனுள்ள துறையாக மாற்றப்படும்.
  • கேள்வி 9:

    "கள்ளர், மறவர், அகமுடையார்" இம்மூன்று சாதிகள் ஒன்றிணைந்து "முக்குலம்" என்பது "யாருக்கு" எதிரானது? (உதாரணத்திற்க்கு: "தமிழ்ச்சாதிகள்" ஒன்று சேர்ந்து "தமிழ்தேசியம்" என்பது "திராவிடர்களுக்கு" எதிரானது!)
  • பல இடங்களில் சிரிக்கும் வகையில் கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்.

    கள்ளர் மறவர் அகமுடையார் என்பது யாருக்கும் எதிரான கூட்டணி அல்ல. ஒரே தன்மை கொண்ட 3 சாதிகள். ஒரே தொழிலை செய்த சாதிகள்.

    ஒரு ஊரில் ஒரு நலச்சங்கம் உருவாகிறது என்றால் அவர்கள் யாருக்கும் எதிரானவர்கள் என்று பொருளில்லை. அவர்கள் தங்கள் நலன்களை பாதுகாக்க அவ்வாறு செயல்படுகிறார்கள் என்று பொருள். முக்குலத்தோர் என்ற இணைப்பு இயல்பாக அமைந்த ஒரு கூட்டு.

    தமிழ்த் தேசியம் என்பது யாருக்கும் எதிரானது அல்ல. அது தவறான புரிதல். தமிழர்களின் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கையில் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.
  • கேள்வி 10:

    தமிழகத்தில் குறிப்பாக கள்ளர் சாதி மக்களிடத்தில் தமிழ்தேசியம் பற்றிய விழிப்புணர்வு எந்த அளவிற்க்கு உள்ளது? தமிழ்தேசிய ஆட்சியில் கள்ளர் ஒருவர் முதல்வராகவேண்டும் என்ற மனநிலை கள்ளர்கள் மத்தியில் இருக்கின்றதா?
  • கள்ளர் சமுதாய மக்களிடம் தமிழ்த் தேசிய உணர்வு மிக மிக குறைவாகவே உள்ளது. அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம். அவர்கள் தமிழ்த் தேசிய ஆட்சி குறித்தெல்லாம் சிந்திக்கவே இல்லை. அப்புறம் எங்கே முதல்வர் பற்றி சிந்தி்ப்பது? அதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

தங்களது மேலான நேரத்தை ஒதுக்கி எங்களது கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி! 
எங்கள் கேள்விகள் சிரிப்பூட்டுவதாக இருப்பினும்.... நீங்கள் அதற்க்கு அளித்த பதில்களின் மூலம் அக்கேள்விக்கான மதிப்பை உயர்த்தி இருக்கின்றீர்கள்.

மீண்டும் ஒரு முறை நன்றி அண்ணா!